சத்துணவு சமையல் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! போலீசில் சிக்கிய அந்த 2 பேர்..?
தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் பணியாள பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்னை காப்பாற்றுக்கள் என காலில் விழுந்த கோரிக்கை வைத்துள்ளார்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக பார்வதி என்ற பட்டியலின பெண்ணும், லதா என்பவரும் சமையல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் லதா அடிக்கடி விடுமுறை எடுத்ததால் சத்துணவு அமைப்பாளர் லதாவை கண்டித்துள்ளார்.
இதற்கு காரணம் பார்வதி தான் என எண்ணிய லதா, பார்வதியை அவதூறாக பேசி, சாதி ரீதியாக திட்டியுள்ளார், மேலும் லதாவின் தம்பி செந்தில்குமார் பார்வதியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பார்வதி புகார் அளித்துள்ளார்.
