மாமியார் வீட்டில் விருந்து..! ஆனா வீடு இல்ல ஜெயில்..! சிக்கிய இளம் ஜோடிகள்..!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முளவிளை பூவன்கோடு கிராமத்தை சேர்ந்த பரமசிவன் ( வயது 50) தொழில் அதிபர் ஆவார். இவர் பரமசிவன் பூவன்கோடு சந்திப்பில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நகை கடைக்கு கடந்த ஜூன் 10-ம் தேதி புதுமண தம்பதிகள் வந்துள்ளனர்.
புதுமண தம்பதிகள் தங்களுக்கு 4 கிராம் மோதிரம் வேண்டும். அதில் விதவிதமான மாடலை காட்டுங்கள் என கூறியுள்ளனர். அரை மணி நேரமாக ஒவ்வொரு மாடலையும் புரட்டி, புரட்டி பார்த்த இருவரும் திருப்தி இல்லை என கூறி அங்கிருந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
அன்று இரவு நகை கடை உரிமையாளர் பரமசிவன் கடையை பூட்டும் போது நகைகள் மற்றும் மோதிரத்தை கணக்கெடுத்துள்ளார். அப்போது 2 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 2 மோதிரங்களை அந்த புதுமணத்தம்பதிகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அருகில் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் அங்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த புதுமண தம்பதிகளின் காட்சிகள் சரியாக பதிவாகவில்லை என்றாலும் அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் எண் பதிவாகியுள்ளதை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்..
அந்த இருசக்கர வாகனம் கன்னியாகுமரியில் உள்ள விடுதி முன்பு நின்றுள்ளதை கண்ட போலீசார் அந்த வாகனத்தை கைப்பற்றியதோடு அதில் வந்த ஆண், பெண்ணை பற்றி விசாரித்ததில் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்து இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்..
அந்த விசாரணையில் மோதிரத்தை திருடியவர்கள் கன்னியாகுமரி திருவிதாங்கோடு கேரளபுரத்தைச் சேர்ந்த இர்ஷாத் (23), மற்றும் அனிஷா என்ற இர்பானா (21) என்பதும், இவர்கள் புதுமண தம்பதி என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்ஷாத், மற்றும் அனிஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
– லோகேஸ்வரி.வெ