நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்..! அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்..!
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது . இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இதில், மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். அதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். இதனை தொடர்ந்து, அதன் மீது விவாதம் நடைபெறும். எனினும், இந்த கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தின ஆவணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அவையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு பற்றி எதிர்க்கட்சிகள் அமளியை கிளப்பின. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..