ஒகேனக்கல்லில் பரிசல்கள் செல்ல தடை ..! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது,.
தருமபுரியில் மிக சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று.., “ஒகேனக்கல் ஆணை” அதிலும் அங்கு படகு பரிசல் மிகவும் பிரசிதி பெற்றது.., சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இந்த சுற்றுலா தளத்திற்கு படகுகள் செல்ல தடை விதித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி.., அங்குள்ள வியாபாரிகளும் பேர் அதிர்ச்சியில் உள்ளனர். கர்நாடகா அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க கோரி கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் பெயரில் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து.., வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 9,136 கன அடியில் இருந்து 13,473 கன அடியாக உயர்ந்துள்ளது. அதை போல கபினி அணையில் இருந்தும் 5ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றிற்கு 18,473 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக அணையில் இருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு 12,500 கன அடி நீர் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு அந்த மாவட்ட அரசு படகு பரிசல் மற்றும் தண்ணீரில் குளிக்க தடை விதித்துள்ளது.
Discussion about this post