ஒரு வருடங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மைதானத்தில் விளையாடியது அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ளது.
@RishabhPant17 back in the ground 😍😍 #rishabhpant pic.twitter.com/M0r1tq9tzl
— Md Israque Ahamed (@IsraqueAhamed) August 16, 2023
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். உடலில் ஏற்பட்ட பல்வேறு காயங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்கான செயல்முறையில் உள்ளார். இதற்காக ரிஷப் பந்த் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி ஜேஎஸ்டபிள்யூ பவுண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில் அவர், கலந்துகொண்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற காட்சி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ரிஷப் பந்த் சில பந்துகளை எதிர்கொண்டு மட்டையால் விளாசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.