இந்தியில் கலக்க ரெடியாகும் அரண்மனை 4.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடித்திருந்த திரைப்படம் அரண்மனை. இதன் முதல் பாகம் 2014ல் வெளிவந்து வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரணடு மற்றும் மூன்றாம் பாகத்தையும் இயக்கி நடித்திருந்தார்.
இந்த மூன்று பாகங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இதன் நான்காம் பாகம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியானது. இதில் தமண்ணா, ராஷிகண்ணா, விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இத்திரைப்படம் குடும்பகள் மற்றும் குழந்தைகளை கவர்துள்ளதால் வசூலில் வேட்டையாடி வருகிறது.
முதல் நாள் மற்றும் தற்போதைய வசுல் நிலவரம் :
குழந்தைகளை கவர்ந்த அரண்மனை 4 முதல் நாளில் ரூபாய் ஏழு கோடியையும் தற்போது வரை ரூபாய் 70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அரண்மனை முதல் மூன்று பாகத்தை விட அரண்மனை 4 வசூல் முறியடித்துள்ளது.
இந்தியில் வெளியாகும் அரண்மணை4 :
காமெடி கலந்த திகிலில் உருவான இத்திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி அறிவிப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24ந்தேதி அரண்மனை4 திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..