ஜாதி குறித்து மாணவனை தாக்கிய P.T.சார்..! பெற்றோர் வைத்த குற்றச்சாட்டு..! பரபரப்பான அரசு பள்ளி..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி பள்ளியில்.. பள்ளிக்கு வெளியே சிறுநீர் கழிக்க சென்ற மாணவனை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதால் மாணவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் தாலுக்கா மேக்கிரிமங்கலம் தோப்புத்தெருவைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் மாசிலாமணி மகன் புவியரசன்(16) குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவன் புவியரசன் பள்ளி முடிந்த பிறகு 12ஆம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்பு நடைபெற்று உள்ளது. இப்பள்ளியில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் மாணவர்கள் வெளியே சென்று சிறுநீர் கழித்து வருவதாக கூறப்படுகிறது.
மாணவன் புவியரசன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் புவியரசன் அழைத்து, எங்கு செல்கிறாய் என்று கேட்டதற்கு..? மாணவன் சிறுநீர் கழிக்க வெளியே செல்வதாக கூறியுள்ளார். பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு செல் என்று கூறி பிரம்பால் அடித்து அனுப்பியுள்ளார்.
ஆனால் மாணவன் விளையாட்டு மைதானத்திற்கு சென்று கால்பந்து விளையாடுவதை வேடிக்கை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஆசிரியர் சீனிவாசன் வகுப்பு செல்லாமல் இங்கு ஏன் நிற்கிறாய் என்று கேட்டு பிரம்பால் அடித்ததாகவும், தொடர்ந்து சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறிய சிறுவனை அடித்து ரூமிற்கு கூட்டி சென்று பிரம்பால் வெளுத்தெடுத்துள்ளார்.
இதனால் உடலில் பட்டை பட்டையாக தோல் சிவந்து கைமணிக்கட்டு வீங்கியுள்ளதாகவும், நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல் என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. என்றும் சாதி பெயரை சொல்லி ஆசிரியர் இழிவாக கூறியுள்ளதாக மாணவன் குற்றம்சாட்டியுள்ளார்..
இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற மாணவன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் அடித்ததை பெற்றோரிடம் காண்பித்து கூறியுள்ளார். தொடர்ந்து மாணவனை பெற்றோர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் மாணவன் புவியரசனின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். மாணவன் புவியரசன் ஒழுங்காக இல்லாததால் அடித்ததாக பள்ளி நிர்வாகத்திடம் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் புகார் தெரிவித்த நிலையில் அவரை பள்ளி நிர்வாகத்தினர் கண்டித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டுள்ளதால் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..