ரசிகர்கள் எதிர்பார்த்த தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு..!
விக்ரம்:
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவர் விக்ரம். பின்னனிபாடகர், தயாரிப்பாளார் ஆவார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களிலும் அவருடைய காதபாத்திரத்துக்கு தானே குரல் கொடுக்கும் பெருமைக்குரிய நடிகர்.
இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த சேது, சாமி, பிதாமகன் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
விக்ரமின் தங்கலான்:
அதனைதொடர்ந்து இவர் விக்ரம் என்னும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி,பார்வதி மேனன்,மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விக்ரமின் 61 வது படமான தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததால் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ரிலீஸ் தேதி:
கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சில பிரச்சனைகளின் காரணமாக, தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி தொடர்பான புதிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, இப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-பவானி கார்த்திக்