மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம் வெற்றி..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..!!
மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம் வெற்றி அமையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் சந்திரகுமார், மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி, உட்பட 47பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். கடந்த ஜனவரி 23ம் தேதி தபால் வாக்குப்பதிவு நடைபெற்று ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணியும் நிறைவு பெற்றது.
இந்நிலையில் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக நம் தொடர் வெற்றி அமையட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் அவர், தொண்டர்களின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..