உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
அரியலூர் மாவட்டம் :
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வெண்மான் கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர், கருப்பசாமி, பாப்பாத்தி அம்மன் திருக்கோவில் புணரமைப்பு பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, யாகசால பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..
தருமபுரி மாவட்டம் :
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி தொடங்கி இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்ட தலைவர் சிவா அவர்கள் ஆணைகிணங்க மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக, தர்மபுரி நகராட்சி முதியோர்கள் காப்பகத்தில் அரிசி, பருப்பு, பிஸ்கட் உள்ளிட்ட சமையல் பொருட்களை வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் செவலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காரையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கால யாகசால பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, காளிகாம்பாள் மற்றும் காமாட்சி அம்மன் மீது ஊற்றினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..