பிரிட்டனை சேர்ந்த ஆலன் வுட் என்ற நபர் அவரது மகளுக்காக 1.2லட்சம் மதிப்பிலான லேப்டாப் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவர் அதை திறந்து பார்க்கையில், இரண்டு பெடிகிரீ நாய் உணவு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ஆலன் வுட் என்பவர் ஐடி நிறுவனத்தின் மானேஜராக இருந்து வருகிறார். அவரது மகளின் கல்வி தேவைக்காக 1.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பை அமேசானில் ஆர்டர் செய்திருந்தார் அதுவும் அடுத்த நாளே டெலிவரி செய்ய வேண்டும் என்றும் ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஆர்டர் செய்தபடி அடுத்த நாளே அந்த பொருள் அவரின் வீட்டிற்கு வந்துள்ளது. அதனை பிரித்து பார்க்கும் பொது அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 1.2 லட்சம் பணத்தை செலுத்திவிட்டு ஆர்டரை திறந்து பார்த்த அவர் அதில் இரண்டு நாய்க்கு போடும் உணவு பார்சேலை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்.
இதனை அடுத்து அவர் உடனே அமேசான் கஸ்டமர் சர்விசுக்கு தொலைபேசி மூலம் அணுகியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, கிட்டதட்ட 15 மணி நேர உரையாடலுக்கு பின் மன்னிப்பு கூறி பணத்தை திருப்பி தர அமேசான் நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆலன் கூறிய போது, 1.2 லட்சம் கொடுத்து வாங்கிய பொருளான லேப்டாப்பிற்கு பதிலாக நாயின் உணவு பொட்டணங்கள் இருந்தால் என்னுடைய முகம் எப்படி இருந்திருக்கும் எஎன்று யோசித்து பாருங்கள் என்று கலகலப்பாக பேசினார். மேலும் அவர் பேசுகையில், முதலில் இந்த பிரச்சனை எளிதில் முடிந்து விடும் என்றுதான் நினைத்ததாகவும் பின்னர் அமேசான் நிறுவனத்தின் பதில்களை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார். அதில், அவர் ஆர்டர் செய்த லேப்டாபை திரும்ப அனுப்பினால் தான் பணத்தை திரும்ப தர முடியும் என்று கூறிவிட்டார்கள். மேலும், அந்த நாய் உணவை திருப்பி அனுப்பியும் எந்த ஒரு முன்னற்றமும் இல்லை இதனால் தான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், 15 மணி நேர நீண்ட உரையாடலுக்கு பிறகே அமேசான் நிறுவனத்திற்கு தனது நிலைமையை புரிய வைத்ததாகவும் கூறினார். இது குறித்து அமேசானின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ஆளனிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளதாகவும், தற்போது அந்த வாடிக்கையாளரிடம் நேரடி தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறினார்.