ரத்து செய்யப்பட்ட இரயில் சேவை..!! தெற்கு இரயில்வே அறிவிப்பு..!!
பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
வருகின்ற ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக மின்சார இரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பகுதி நேர ரத்து :
சென்னை கடற்கரை டூ விழுப்புரம் இடையேயான மின்சார இரயில் சேவைகள் பராமரிப்பு பணியின் காரணமாக
வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி இரவு 10.40 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
முழு நேர இரயில் சேவை ரத்து :
சென்னை கடற்கரையிலிருந்து இன்று இரவு புறப்படும் இரயில்கள் முதல் 16-ம் தேதி இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய தாம்பரம் இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது…
அதேபோல் செப்டம்பர் 16-ம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் செல்லும் மின்சார இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது..,
அதேபோல் கும்மிடிப்பூண்டி (இரவு 10.45 ) இரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது..
அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார இரயில் சேவைகள் இன்று இரவு முதல் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி காலை வரை இரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
மற்றும் செப்டம்பர் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை திருவள்ளூர் இரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது..
அதே சமயம் நாளை சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் செங்கல்பட்டு இரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது..
அதே இன்று இரவு முதல் 16ம் தேதி இரவு 8 மணி வரை திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் மின்சார இரயில்கள் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பகுதி நேரமாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளது..
அதேசமயம் சென்னை எழும்பூர் டூ கடற்கரை இடைய இரயில் சேவைகள் இயங்காது என்பது குறிப்பிடதக்கது..
கூடுவாஞ்சேரியில் இருந்து (13-ம் தேதி) மற்றும் 16-ம் தேதி இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் நிறுத்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.