பிக்பாஸில் ஒரு நாள் சம்பளம்..? அர்னாவ் சொன்ன பதில்..!!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசனானது தற்போது மிக விறுவிறுப்பாக போகிறது என சொல்லலாம்..,
நேற்று பிக் பாஸ் சீசன் 8ன் இரண்டாவது வார எலிமினேஷன் நடைபெற்றது.. அதில் மக்களிடையே குறைவான வாக்குகளை வாங்கிய அர்னவ்., பிக்பாஸ் வைத்த டாஸ்க்களில் சரியாக விளையாடவில்லை எனக்கூறி மக்கள் வாக்குகள் அளித்தனர்..
யார் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அர்னாவ் பெயரை விஜய்சேதுபதி சொன்னதும் அன்ஷிதா அர்னவை கட்டிப்பிடித்து அழுது தன்னுடைய எமோஷனை வெளிப்படுத்தினார்..
அந்த எமோஷனோடு அர்னவ் வெளியேறி விடுவார் என பலரும் நினைக்க., பிக் பாஸ் டிராபியை உடைத்து தன் கோபத்தை வெளிபடுத்தினார். அதன் பின்னர் பெண்கள் டீமை பாராட்டியும், ஆண்கள் டீமை பார்த்து ஜால்ரா அடிப்பவர்கள் எனவும் கூறியுள்ளார்..,
அர்னவின் இந்த பேச்சு வன்மத்தை கொட்டும் வகையில் இருந்ததால்., கோபமடைந்த விஜய் சேதுபதி “இது அநாகரிக பேச்சு. இந்த இடத்தில் நீங்க இப்படி பேச கூடாது” என எச்சரித்து அர்னாவ்வை வெளியேற்றினார்..
பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்னாவ் வாங்கிய சம்பளம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.,
அதாவது நாள் ஒன்றுக்கு தொகுப்பாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாகவும்., தற்போது வரை அர்னாவ் வாங்கிய சம்பளம் 3.5 லட்சம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..