“ஒரே நாடு ஒரே தேர்தல்..” பிரதமர் மோடி போட்ட மாஸ்டர் பிளான்..!!
மத்திய அரசின் கோரிக்கையாகவுள்ள ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த வேண்டுமென முடிவு செய்துள்ளது.. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைபடி, இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.. 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் மோடி..
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்பதால் அதனை நடைமுறைக்கு கொண்டு வர மற்றொரு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் பழைய சட்டங்களை திருத்தம் செய்து அதனை புதிய சட்டங்களாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற மசோதா தாக்கல் செய்யப்படும் என பாஜக சார்பில் தெரிவித்துள்ளது..
இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற சட்டதை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தது ஐந்து பிரிவுகளின் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அந்த பிரிவுகளாவது “பாராளுமன்றத்தில் அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83, குடியரசுத் தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85, மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172, சட்டமன்றங்கள் மாநில சட்டமன்றங்கள் கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 மற்றும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 மேற்கண்ட பிரிவுகளில் மாற்றங்கள் செய்யபட வேண்டி இருக்கும்..
இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு சில திட்டங்களை வைத்துள்ளது..
இந்த தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் முதலாவதாக மக்களவை தேர்தலும்., சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியான பின் இரண்டாம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். முதல் கட்ட தேர்தல் முடிந்து முதல் மூன்று மாதத்திற்குள் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும்..
இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் முறையான பிரச்சாரம் மேற்கொள்ள முடியும்.., ஐந்து வருடத்தில் ஒவ்வொரு வருடத்திற்கு ஒவ்வொரு மாநிலத்தில் நடத்தப்படும் அதுவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் முதல் 3 மாதத்திற்கு மட்டுமே தேர்தல் காலமாக இருக்கும்.. ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.
இதனால் தேர்தலில் ஏற்படும் செலவுகள் குறையும் அதேபோல் தேவையில்லாத பிரச்சார செலவுகளையும் குறைக்க முடியும் குறையும். கடந்த மார்ச் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரையின் படி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல கேள்விகளை அரசியல் வல்லுனர்கள் முன்வைத்துள்ளனர்
1. தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்?
2. தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்..?
3. ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?
4. இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீட்டிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா..?
5. சட்டமன்றங்கள், மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் மாநிலங்களின் உரிமை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..