ADVERTISEMENT
சுவையான செட்டிநாடு ஸ்டைல் கடம்பா மீன் கிரேவி செய்வது எப்படி..!
தேவையான பொருட்கள்:
கனவா- 500 கிராம்
வெங்காயம்– 20
பூண்டு-8
இஞ்சி- ஒரு துண்டு
மல்லி– இரண்டு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
சோம்பு- ஒரு ஸ்பூன்
வரமிளகாய்- மூன்று
பட்டை– இரண்டு
கிராம்பு- இரண்டு
அண்ணாச்சி பூ- ஒன்று
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
உப்பு– தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து மல்லி, சீரகம், சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ ஆகியவற்றை எல்லாம் வாணலில் கொட்டி எண்ணெய் ஊற்றாமல் ட்ரையாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக வாசனை வரும்வரை வறுத்து எடுத்ததும் ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் மற்றொரு வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பின் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், அத்துடன் முன்பு தனியாக அரைத்துவைத்துள்ள மசாலாவை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக கிளற வேண்டும்.
அந்த மசாலாவில் நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அத்துடன் கடைசியாக கழுவி வைத்திருக்கும் கனவா மீனை சேர்க்க வேண்டும்.
மசாலாவின் சாறு கனவாய் மீனில் நன்றாக இறங்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கனவா மீன் கிரேவி தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.