ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கிய பண்டிகை கேரள மாநிலத்தின் ஓணம். ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . அன்று பள்ளி , கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் செயல்படாது. குறைந்த அளவு பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்ப்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 2ம் தேதி முழு நேர பணீ நாளாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.