நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாங்குநேரியில் பள்ளி மாணவனுக்கு சாதிய வன்கொடுமை நடந்தது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு அறிக்கை தாக்கல் செய்தார். முதன்மை கல்வி அலுவலர் துறை ரீதியிலான முதற்கட்ட விசாரணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் தாக்கல் செய்தார்.
பள்ளியில் மாணவருக்கு நடைபெற்ற சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும், நாங்குநேரியில் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.