5 வயது சிறுவன் டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே டிராக்டரில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் தனது 5 வயது மகனை பக்கத்தில் உட்கார வைத்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் களை எடுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களை எடுக்கும் டிராக்டரில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.