ஆடிமுதல் நாள்…பாதையாத்திரை சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டியையைச் சேர்ந்த பக்தர்கள் ஆடி முதலா நாள் என்பதால் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.