திருப்பூரில் தொடரும் மர்ம கொலை..!! போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை.., ஊர்மக்கள் போராட்டம்..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் அருகே கள்ளக் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட போது, ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமி அரிவாளால் வெட்டியதில் செந்தில்குமார், மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியாகினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள்உள்ளிட்ட 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், செந்தில்குமார் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவரின் உடல்களை எடுக்கவிடாமல் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையாளியை கைது செய்த பிறகு தான் மற்ற மூவரின் உடல்களையும் எடுக்க விடுவோம் எனக் கூறி உறவினர்களும், ஊர்மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..