பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயன்றதால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
மதுராந்தகம் அருகே பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் குளியறையில் குளித்துக் கொண்டிருந்த போது, தனது வீட்டின் மாடியிலிருந்து செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தனசேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.