மோடி பதவி ஏற்ற 3 வது நாளில்.! காஷ்மீர் பயங்கரவாதிகள்..!
ஜம்மு – காஷ்மீரில் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 9 பேரை கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றோரு பயங்கரவாத தாக்குதலில் கிராம வாசி ஒருவர் கொள்ளப்பட்டு இருப்பது காஷ்மீர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமராக 3-வது முறை மோடி பதவியேற்ற 9-ம் தேதி ரீசியில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 33 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள சைடா சுகால் கிராமத்தில் வீடு ஒன்றின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் ரீசி மற்றும் கத்வாவில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் தோடாவிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..