கருணாநிதியின் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்..! நெகிழ்ச்சியில் பொன்னேரி மக்கள்..!
திருவள்ளூர் மாவட்டம்,
மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம்,அத்திப்பட்டு பகுதிகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி கேக் வெட்டப்பட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின் 101 கலைஞரின் சிறிய சிலைகள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில்:
ஊராட்சிமன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் ஏற்பாட்டில் ஒன்றிய கழகச்செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் பத்தாம்வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த குஷிசிங் என்ற மாணவிக்கு ரூபாய்.20 ஆயிரமும், இரண்டாம் இடம்பிடித்த மதுமிதாவுக்கு ரூபாய் 10 ஆயிரமும், மூன்றாம் இடம்பிடித்த மாணவன் நிரஞ்சனுக்கு ரூபாய் 5 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கினார்.
சிறப்பாக பணிபுரிந்த அத்திப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுன்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களூக்கு தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக்வெட்டிக் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.
இதே போன்று தடப்பெரும்பாக்கம் ,வாயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மேலும் மற்ற ஊராட்சிகளில் கலைஞரின் திருவுரு படம் வைக்கப்பட்டு கழககொடி ஏற்றி பின் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
-பவானிகார்த்திக்