மைவி3 ADS சக்தி உட்பட 3 பேர் மீது…!! வைரலாகும் ஆடியோ..!
கோயம்புத்தூர் பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது, “கோவையின் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைவி3 நிறுவனம் (MyV3 Ads) விளம்பரங்களைப் பார்த்தாலே லட்சக்கணக்கில் மாதம் மாதம் பணம் சம்பாதிக்க முடியும் என பொய்யான ஆசைகளை காட்டி விளம்பரம் செய்து வருகின்றனர்.
மேலும், அதனை நம்பி பாமாவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களிடம் இருந்து தற்போதுவரை சுமார் 2,000 கோடி ரூபாய் வரை மைவி3 நிறுவனம் வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு வரை மைவி3 நிறுவனம் செய்துள்ள பண மோசடிக்கு எதிராக புகார் அளித்திருந்தோம்.
எனவே, இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டிருக்கும் மக்களுக்கு அவர்களின் பணத்தை மீட்டு மீண்டும் அவர்களிடம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டும், குறிப்பாக மைவி3 நிறுவனத்தின் மீதும் அதன் நிறுவனர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, கடந்த மாதம் 27ம் தேதி அசோக் ஸ்ரீநிதியின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் எதிர்தரப்பில் பேசிய மர்ம நபர், மைவி3 நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட எண்ணை ட்ராக் செய்து பார்த்தபோது.., அந்த எண், மைவி3 நிறுவனத்திற்கு சொந்தமான எண் என்பது உறுதி செய்யப்பட்டது, அதன் பின் காவல்துறையினர் தரப்பில் பெரும் சந்தேகமும் சர்ச்சையும் கிளம்பியது..,
சக்தி ஆனந்த் மற்றும் விஜயராகவன் :
இந்த கொலை மிரட்டல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் விஜயராகவன் செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது என்றும், இதனை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அசோக் ஸ்ரீநிதி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், ஆடியோ தொடர்பாக பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், மைவி3 உரிமையாளர்கள் சக்தி ஆனந்த், விஜயராகவன் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர் உட்பட இன்னும் 3 பேர் மீது காவல்துறையினர் கொலைமிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகிரங்க கொலை மிரட்டல்:
MYV3ADS மோசடி தொடர்பாக புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். (9042457527 – Kannan) pic.twitter.com/t1Ge6MZwkX
— Ashok Srinithi (@AshokSrinithi) April 27, 2024
இதற்கிடையில், மிரட்டல் விடுத்த ஆடியோ மற்றும் அதற்குப் பயன்படுத்திய செல்போன் எண் ஆகியவற்றை, கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தன்னுடைய ‘X’ வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தற்போது இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.