ஜெட் வேகத்தில் உயர்ந்த எண்ணெய் விலை…!! நிர்மலா சீதாராமன் கொடுத்த இடி அப்டேட்..!!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எண்ணெய்களின் விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் “பாமாயில் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களின் விலை மற்றும் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில் விளைச்சல் செய்யப்படும் காய்கறிகள்., பழங்கள் மற்றும் அரசி தவிர இதர உபயோகப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யபடுகிறது
நம் நாட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இறக்குமதி வரி என்பது ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு கட்டணத்தில் வரி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
குறிப்பாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யபடும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் தாவரங்கள் மூலம் கிடைக்கும் எண்ணெய் வித்துகளின் வழியாக உற்பத்தியாகும் சமையல் எண்ணெயின் (Vegetable Oil) தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமாக தான் பூர்த்தி செய்து வருகிறது.
குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்த் போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யபடுகிறது.. அதேபோல் அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குதி செய்யப்படுகிறது.
இப்படி இருக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமனின் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிப்பில், சொல்லியிருபதாவது ‛‛Crude வகை சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 12.5 சதவீத்தில் இருந்து 32.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது…
அதற்கான பிரத்யேக அறிவிப்புகளை நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில் இந்த வரி உயர்வானது இன்று முதல் நடைமுறை படுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் விலை உயர்வின் காரணம் குறித்தும் தெரிவித்துள்ளது… அதாவது விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் இந்த முடிவு என்பது எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் முடிவிற்கு மற்றொரு காரணமும் தெரிவித்துள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தில் சோயாபீன் எண்ணையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகம் இருக்கிறார்கள். இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது .
அதாவது நம் நாட்டில் கிடைக்கும் வித்துக்களானது அதாவது சமையல் எண்ணெய்களுக்கு தேவைப்படும் எண்ணெய் வித்து பிற நாட்டில் கிடைப்பதை விட நம் நாட்டில் குறைந்த அளவில் கிடைக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்படுவதாக தெரிவித்துள்ளது.. அதாவது விளைச்சல் செய்தும் லாபம், இல்லை என சொல்லபடுகிறது..
இந்தியாவில் பல கோடி மக்களும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.. சமையல் எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரும் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெயின் அளவு குறையும். இதனால் உள்நாட்டில் உள்ள சமையல் எண்ணெய் வித்துகளுக்கு மவுசு கூடி அவர்களுக்கு லாபம் கிடைக்கும். இதனால் தான் தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குதி வரி என்பது 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி உயர்வு என்பது விவசாயிகளுக்கு லாபமானதாக மாறினாலும் கூட சமையல் எண்ணெய் விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
அதாவது வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி குறையும்படி தானாகவே அதன் விலை என்பது உச்சம் தொடலாம். அதன்படி .25 ரூபாய் வரை சமையல் எண்ணெய் விலை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது. அறிவிப்புகள் வெளியான நிலையில் விலை எப்போது உயரும் என மக்கள் அச்சத்தில் எதிர்பார்த்து இருக்க அடுத்த வாரத்திற்குள் விலைகள் உயரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது..
இதுபற்றி டெல்லியை சேர்ந்த உலகளாவிய எண்ணெய் வர்த்தக டீலர் ஒருவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் சமயைல் எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாமாயில் தான் இருக்கிறது. இதனால் தற்போதைய இறக்குமதி வரி உயர்வு என்பது இன்னும் ஒரு வாரத்தில் பாமாயில் விலையை கிடுகிடுவென உயரலாம்” என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..