அய்யோ இதை வாங்க 90ஸ் கிட்ஸ் நாங்க பட்ட பாடு இருக்கே…!
தொலைக்காட்சி ஆரம்ப காலகட்டத்தில் இப்போ இருக்குற மாதிரி நிறைய சேனல்கள் கிடையாது. முதலில் ஒரே ஒரு சேனல் தான் இருந்தது அதன் பெயர் “தூர்தர்ஷன்” இந்த தொலைக்காட்சி கவர்ன்மெண்ட் நடத்துவது அணைத்து மொழி மக்களும் கண்டு கழித்த ஒரு தொலைக்காட்சி என்ற பெருமை தூர்தர்ஷன்யை சேரும்.
இதில் போடும் செய்திகளாக இருக்கட்டும் வேறு நிகழ்ச்சியாக இருக்கட்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்ப்பது தான் அந்த காலகட்ட வீடுகளில் இருந்தது, இப்போ எல்லாம் பிறந்த குழந்தைகள் தவிர வளரும் குழந்தைகள் அனைவரும் மொபைல் போன் மட்டும் தான் பாத்திட்டு இருக்குறாங்க போற போக்கில் தொலைக்காட்சியை மறந்து போகும் நிலைதான் வரப்போகிறது என்று எனக்கு தெரிகிறது.
அதை எல்லாம் விடுங்க நம்ம 90ஸ் கிட்ஸ் காலங்கள் எல்லாம் பொன்னான காலங்கள் என்றே சொல்லலாம் ஒரு இயற்கையான காலங்கள் என்றே சொல்லலாம். “ஒளியும் ஒலியும்” பார்பதர்க்கவே காத்திருப்பார்கள் பள்ளி குழந்தைகள் முதல் குடும்ப பெண்கள் வரை.
அதை கடந்து வந்தால் தொடர்கள் போடா ஆரம்பித்தது தான் அந்த தொடர்களை இப்போ போட்டாலும் பார்ப்பதற்கு 90ஸ் கிட்ஸ் பசங்க அவளாக இருப்பாங்க என்றே சொல்லும் அளவிற்கு இருக்கும்.
“சக்திமான்” இந்த தொடருக்கு சின்ன குழந்தைகள் அனைவரும் தீவிர ரசிகர்கள் என்றே சொல்லலாம் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சக்திமான் காப்பாத்துவார்.. என்று அனைவரும் சக்திமான் மீது அதீத நம்பிக்கை கொண்டு இருந்தனர் என்பது உண்மையை.
இதனால் சில குழந்தைகள் சக்திமான் நம்மை காப்பதுவர் என்று மொட்டை மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்து விட்டது மட்டும் கொஞ்சம் வருத்தம் அளிக்கின்றது. இப்படியாக தன்னுடைய வீட்டின் பாதுகாவலன் என்று நினைத்து இருந்தனர்.
சக்திமானை, குழந்தைகளும் இதைப்பார்த்து முயற்சி செய்வதனால் இந்த தொடரை நிறுத்தி விட்டனர். ஆனால் சிலர் இன்றும் இந்த சீரியலை பற்றி பேசினால் அவருடைய மனதில் இனம் புரியாத மகிழ்ச்சை கண்ணில் காண்பது உண்டு.
அதனை தொடர்ந்து இன்னோரு தொடர் என்னவென்றால் “ஜீ பூம்பா” இந்த தொடரை பார்த்து பென்சில் குழந்தைகள் செய்யவும் சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம் இந்த சீரியலில் வரும் பென்சிலை வாங்குவதற்கு குழந்தைகள் அனைவரும் அடம் பிடித்து வாங்குவார்கள்.
அதை வாங்கி என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா..? பரிச்சையில் நூறு மதிப்பெண் வாங்க வேண்டும் என்று அந்த ஜீ பூம்பா பென்சிலில் எழுதுவார்கள் எவ்வளவு நம்பிக்கை என்று பாருங்க அந்த பென்சில் மேல் இந்த சீரியலும் 90ஸ் கிட்ஸ் பிடித்த ஒன்று.
அதிலும் இந்த பவர்ரேஞ்சர் பாத்து ஏமாந்து போன 90ஸ் கிட்ஸ் நிறைய பேர் என்று சொல்லலாம், காம்பளான் வாங்குன இந்த “பவர்ரேஞ்சர் வாட்ச்” கிடைக்கும் அப்படினு வீட்டில் அடம் புடித்து காம்பளான் வாங்குனவங்க நிறைய பேர்..
சி கம்பளனை குடிக்கிறாங்களோ இல்லையோ அந்த பவர்ரேஞ்சர் வாச்சை கையில் மாட்டிக்கொண்டு சந்தோச படாதவர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
இப்போல்லாம் என்ன சீரியல் இந்த சீரியல்களுக்கு ஈடாகுமா, கண்டிப்பா திரும்பவும் இந்த சீரியல் தொலைக்காட்சியில் போட்ட கண்டிப்பா பாத்து என்ஜாய் பண்ணுங்க எங்களை மாதிரி…
– சரஸ்வதி