கொல்கத்தாவில் இரவோடு இரவாக மாற்றப்பட்ட அதிகாரிகள்..!! மம்தா பானர்ஜி எடுத்த அதிரடி முடிவு..!!
கொல்கத்தாவின் காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல், கொல்கத்தா வடக்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் டெபாசிஸ் ஹல்தார் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்குநர் கவுஸ்தாவ் நாயக் உட்பட இரண்டு மூத்த சுகாதார அதிகாரிகள் பணி நீக்கம் செய்யபடுவதாக மம்தா தெரிவித்துள்ளார்..
கொல்கத்தாவில் இரவோடு இரவாக மாற்றப்பட்ட அதிகாரிகள்..!! மம்தா பானர்ஜி எடுத்த அதிரடி முடிவு..!!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
பெண் பயிற்சி மருத்துவர் கொலை கொலை செய்யப்பட்ட வழக்கு நாடுமுழுவதும் காட்டு தீயாக பரவி வரும் நிலையில் நேற்று மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் பணி நீக்கம செய்யபடுவார்கள் என அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. குற்றவாளியான சஞ்சய் ராய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.. பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது., தற்போது இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அறிந்த மம்தா பேனர்ஜி மருத்துவர்களை போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்..
ஆனால் மம்தா பானர்ஜி மீண்டும் மருத்துவர்களை பேச்சு வார்த்தைக்காக அழைத்துள்ளார்.. இவர் 5வது முறையாக மம்தா., மருத்துவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைகிறார் என்பது குறிப்பிடதக்கது.. ஆனால் இந்த முறை மருத்துவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு காளிகட்டில் உள்ள மம்தா வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் 30 பேர் கொண்ட குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். பேச்சுவார்த்தையில், பயிற்சி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டுமென மம்தா வலியுறுத்தினார்.
அந்த பேச்சு வார்த்தையில் பேசப்பட்டதாவது., “எங்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு உயர் மருத்துவ அதிகாரிகளையும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல் ஐ.பி.எஸ்ஸையும் நீக்குவதாக அறிவித்தார். வினீத் கோயல் ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், நாளை (செப்டம்பர் 17) மாலை அவர் ராஜினாமா செய்யபடுவார்கள் என மம்தா உறுதியளித்துள்ளார்..
கொல்கத்தாவின் காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல், கொல்கத்தா வடக்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் டெபாசிஸ் ஹல்தார் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்குநர் கவுஸ்தாவ் நாயக் உட்பட இரண்டு மூத்த சுகாதார அதிகாரிகள் பணி நீக்கம் செய்யபடுவதாக மம்தா தெரிவித்துள்ளார்..