இனி நாடே லடாக் – மணிப்பூர் போல தான்..! மோடியை விமர்சித்த நிர்மலா சீதாராமன் கணவர்.!
முக்கியமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்தது போலவே தேசிய அளவில் மாற்றங்கள் நடக்கிறதோ என்று அரசியல் நிபுணர்கள் விவாதிக்க தொடங்கி உள்ளதாக எச்சரித்துள்ளார்.
அதாவது தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார் பிரபாகர். மனைவி பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் என்றாலும், கணவர் பாஜக ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்பவர்.
இதுபற்றி சில நாட்களுக்கு முன் அவர் அளித்திருந்த பேட்டியில், பாஜகவிற்கு மெஜாரிட்டியே கிடையாது. மெஜாரிட்டி எண் 272. அதை பாஜக பெற வாய்ப்பே இல்லை. அந்த கட்சிக்கு 200 – 220 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால் அந்த இடங்களில் கூட 220 என்பது கூட அதிகபட்ச நம்பர். அவ்வளவு கூட கிடைக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடையாது. என்டிஏ கூட்டணி 272 கிடைக்க வாய்ப்பு இல்லை.
அவர்கள் கூடுதலாக 30- 35 இடங்களை பெறலாம். சேர்த்து பார்த்தால் 250- 265 இடங்களை என்டிஏ மொத்தமாக பெறலாம். அதுதான் அவர்களின் நிலை. என நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. பாஜக தோற்றால் அந்த கட்சி எளிதாக தோல்வியை ஏற்றுக்கொண்டு போகாது. ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு வருடத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற திட்டம் நிறைவேறாமலே போகும்.
காந்தியைக் கொன்ற பிறகு ஏற்பட்ட நிலை தான் இப்போது வரும். எனவே வீழ்ச்சியைத் தடுக்க அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
பாஜக வீழ்ந்தால் ரஃபேல், PM Cares உள்ளிட்ட பல மோசடிகள் வெளியாகும். அது, பாஜகவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நடக்கும் சண்டை. அதற்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், “இந்தியாவின் வரைபடம் மாறும்” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை தான் உருவாகும் என பிராபகர், மோடியை விமர்சித்து பேசியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ