பாஜகவில் கருப்பு ஆடு..! விரைவில் பட்டியல் வெளியாகும்..!! அண்ணாமலையின் பரபரப்பு பேச்சு..!
சென்னை அமைந்தகரையில் அண்ணாமலை தலைமையில் இன்று காலை முதல் பொது கூட்டம் நடந்து வருகிறது. அதில் பாஜக மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், எதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது என தெரியவில்லை.
அதைவிட முக்கியமாக, திமுக வலுவாக உள்ள சில தொகுதிகளில் எப்படி ஜெயிக்க வேண்டும் என நிலையில் பாஜக இருப்பதால்.., அதற்காக ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தொண்டர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், திட்டமிட்டபடி, பாஜகவின் கணக்குகள் அத்தனையும் நொறுங்கி விட்டதாகவும்., அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய் சேரததால் சில இடங்களில் சரியாக மேற்கொள்ளவில்லை என அண்ணாமலை கூறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்த விசாரணை நடத்துவதுடன், இதுபோன்ற சிக்கல்கள், வரப்போகும் சட்டசபை தேர்தலில் வரக்கூடாது என்பதற்காக இப்போதே, பாஜக நிர்வாகிகள் அலர்ட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
“தமிழகத்தில் பாஜக இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை 2026ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இப்போதே வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறியிருக்கிறார்.
மேலும் தேர்தல் களப்பணியில் ஆர்வம் காட்டாதவர்கள், பணத்தை முறையாக விநியோகிக்காமல் கையாடல் செய்தவர்கள், என அத்தனை பட்டியலும் எடுத்துள்ளோம். அதை வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்..
அதேபோல, சட்டசபை தேர்தலில் சீட்டு ஏராளமான இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களுக்கும் கொடுக்கப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனை மாவட்ட அளவில் தொடங்கி, மாநில பொறுப்புகள் வரை பெரிய அளவில் செய்ய இருப்பதால். கட்சியின் சீனியர்கள் கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.., மேலும் அவர்களை கட்சியில் இருந்து நீக்க கூட்டத்திற்குள் ஒரு கருப்பு ஆடு உள்ளது. எனவே சீனியர்கள் தப்பை திருத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல, தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்க வேண்டும். எனினும், புதியவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதைவிட, முக்கிய நபர்களில் யாருக்கு பொறுப்பு பறிபோக போகிறது என்பதிலேயே பலர் பீதியில்
உள்ளனர்..
என இவ்வாறே அண்ணாமலை கூட்டத்தில் பேசியுள்ளார்.. இதனால் பாஜகவினர் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..