“இனி கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு..” கையெழுத்தான ஒப்பந்தம்..!
சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுக்களை குறைக்கும் வகையில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக சென்னையில் மெட்ரோ திட்டம் அமலுக்கு வந்த பின் பயணிகளுக்கு எளிமையாகி விட்டது என சொல்லலாம். ஆனால் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த மெட்ரோ திட்டமானது செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
மேலும் ஒரு சில வழித்தடங்களில் மாறி செல்லும் வசதியும் உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் டூ கோயம்பேடு வரை செல்வதற்கான ஒரு வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து விம்கோநகர் செல்வதற்கான மற்றொரு வழித்தடம்.. சென்னை டூ மீனம்பாக்கம் விமானநிலையம் என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பச்சை வழித்தடம் மற்றும் நீலம் வழித்தடம் என 2 வழிதடங்களில் சென்று கொண்டு இருக்கிறது,
அந்த வகையில் சென்னை வாசிகளுக்கு மெட்ரோ மிக முக்கிய பங்கு அளிக்கிறது என சொல்லலாம். அதாவது, சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த மெட்ரோ இரயில், திட்டம் தற்போது சென்னை மக்களின் போக்குவரத்தில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை செல்லும் மற்றொரு மெட்ரோ இரயில் திட்டம் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திட்டதிற்கான அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் M/s RITES நிறுவனத்திற்கு 80.48 லட்சம் மதிப்பில் நேற்று கையெழுத்திடப்பட்டது. அதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s RITES நிறுவனத்திற்கு ஜூன் 11ம் தேதி வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் இ.ஆ.ப., மற்றும் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் M/s RITES நிறுவனத்தின் சார்பாக சுதீப் குமார் குப்தா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த மெட்ரோ இரயில் திட்டமானது தோராயமாக 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு 15 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழில்துறை மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மெட்ரோ இரயில் திட்டம் அமைப்பதற்கான திட்டம் அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று கோயம்பேடு டூ ஆவடி மெட்ரோ இரயில் திட்டம் அறிமுகப்படுத்தபட்ட விரிவான திட்ட அறிக்கையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் M/s RITES நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..