இதுவரைக்கும் ஒரு ஆடியோ லான்ச் நடந்ததே இல்லை..!! மனம் திறந்த “பரணி”
உங்கள் இசை பயணம் எப்போது தொடங்கியது ?
சிறுவயதில் இருந்தே இசை மீது அதிக ஆர்வம், காதல் படிப்பில் விருப்பம் இல்லாமல் 1989ல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் .நிறைய கஷ்டங்களை கடந்து இசையை கற்றுக்கொண்டேன் .
* முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது ?
எனது நண்பர்கள் மூலமாக 1992 ல் நாளையத்தீர்ப்பு படத்தில் விஜய்க்கு ஒரு அரசியல் சம்மந்தப்பட்ட பாடல் எழுதினேன். அந்த பாடல் தற்போது விஜய் அரசியலுக்கு வந்தது இப்போது நினைவு கூர்ந்திருக்கிறது. அனைவரும் இப்போது அந்த பாடலை கேட்கின்றனர். அதன்பிறகு 1999ல் பெரியண்ணா படத்தில் இசையமைத்தேன் .அந்த பாடல்கள் மிகவும் பிரபலமாகியது. அதில் இருந்து நிறைய படம் வாய்ப்புகள் வந்தது .
* உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யாரு ?
அப்போது எல்லோருக்கும் பிடித்தமானவர் இளையராஜா தான். அவர் பாடல்களை கேட்பேன். அதன்பிறகு உலக இசைகளை கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து புதுவிதமான இசையை கற்றுக்கொண்டு ,பின்பு இசையமைத்த படம் தான் பார்வை ஒன்றே போதும்.
* எந்த நடிகருக்கு இசையமைக்க உங்களுக்கு விருப்பம் ?
பெரிய படங்களுக்கு பெரிய, பெரிய நடிகர்களுக்கு இசையமைக்க ஆசை கனவுகள் இருக்கு ஆனால் வாய்ப்புகள் கிடைக்கணும். அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை சரியாகத்தான் பயன்படுத்தினேன் ,பிறகு விஜய், சூர்யா, பிரபு, பிரபுதேவா, விஜயகாந்த், முரளி , போன்ற நடிகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன்
* தமிழ் தவிர வேறு எந்த மொழிகளில் இசையமைத்திருக்கிறீர்கள் ?
தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளில். இசையமைத்திருக்கிறேன். தமிழுடன் சேர்த்து மொத்தம் 41படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
* கடைசியாக இசையமைத்த படம் எது ?
ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் “மெய் பட செய்” படத்தில் இசையமைத்தேன் .ஆனால் அது வரவேற்பை பெறவில்லை .இப்போதெல்லாம் வாரம் ஒரு படம் வெளியானால் எப்படி hit ஆகும்.
அதுமட்டும் இல்லாமல் தற்போது எல்லாம் செல்போன்லயே பார்த்துவிடுகிறார்கள் ,ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் ட்ரெண்ட் ஆகி ,பிறகு மறைந்து போய்விடுகிறது .பெரிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை .
* எதனால் வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சிது ?
2005 வரை புகழின் உச்சியில் busy ஆக இருந்தேன். 2007ல் அப்பா தவறிவிட்டாரு அதன்பிறகு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டேன். அப்போது பட வாய்ப்புகளை இழந்தேன். இயற்கையை தவிர்க்க முடியாது. ஆனால் இப்போது மீண்டும் அதே வேகத்துடன் களமிறங்கிருக்கிறேன் .நிறைய புது tune கள் வைத்திருக்கிறேன். மீண்டும் வருவேன்.
* இப்போ இருக்கிற இசையமைப்பாளர்களில் யாருடைய இசை சிறப்பாக இருக்கிறது ?
அனைவரும் சிறப்பாக செய்கிறார்கள் ,யுவன்சங்கர்ராஜா மற்றும் அனிரூத் இசை நன்றாக இருக்கிறது .
* சினிமாவில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததா ?
அப்போது அங்கீகாரம் கிடைக்கவில்லை. பணபலமும் படைபலமும் இருக்கிறதால இப்போ இருக்குறவங்களுக்கு ஈஸியா அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை .
* உங்க பாடல்களுக்கு ஆடியோ லான்ச் நடத்த வாய்ப்பு கிடைத்திருக்கா ?
இல்லை, நான் இதுவரை வெறும் 5 கச்சேரிகள் மட்டுமே பன்னிருக்கிறேன். அந்த மாதிரி ஆடியோ லான்ச் நடந்ததில்லை .
– நிரோஷா மணிகண்டன்,
– கெளசல்யா
Discussion about this post