கண்கலங்க வைக்கும் மாரிமுத்துவின் கடைசி தருணம்..!!
https://www.youtube.com/live/OcB2YbQK20U?si=2mzaKZMMGhh6elql
வாலி, பரையேறும் பெருமாள், பைரவா ஜெயிலர், மருது, கொம்பன் போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராகவும், புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற படத்தில் இயக்குனராகவும் பணிபுரிந்தவர் நடிகர் “மாரிமுத்து”.
40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், “எதீர்நீச்சல்” தொடர் மூலம் பிரபலமாகி “ஏம்மா ஏய்” என்ற வசனம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் “மாரிமுத்து” என்கிற “ஆதி குணசேகரன்” நேற்று காலை சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உடல் நல சோர்வு ஏற்பட்டுள்ளது.
பின் ஸ்டுடியோவில் இருந்து வெளி வந்த அவர் தானாக காரை இயக்கி சென்று மருத்துமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் மருத்துவம் பார்பதற்குள்ளே இயற்கை எய்தினார்.
அன்னாரின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
எதிர்நீச்சல் தொடரில் நடித்த துணை நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்து, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் செலுத்தினர்.
இன்று காலை சொந்த ஊரான தேனி மாவட்டம் பக்கத்தில் உள்ள பசுமலை தேரிக்கு கொண்டு வரப்பட்டது. அவரின் உடலை கட்டி பிடித்து ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழும் காட்சி இன்னும் சோகத்தை அளிக்கிறது.
நேற்று காலை எதிர்நீச்சல் தொடரில் வரும் கதிர்வேலின் மகள் “தாரா” அவர் எனக்கு “ரீல் பெரியப்பா இல்ல ரியல் பெரியப்பா” பெரியப்பா நீங்க எப்ப வருவீங்க சொல்லி அழும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைக்கிறது.
இன்று மதியம் 1 மணிக்கு மேல் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post