மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வடமாநில ஆசிரியர்… 4 பிரிவுகளில் கீழ் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் ராஜஸ்தானை சேர்ந்த ராமசந்திரன் என்ற ஆசிரியர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரிடம் பாலீயல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில், அந்த ஆசிரியர் பல மாணவிகளிடம் இதுபோன்று பாலியல் ரீதியான சீண்டல்களை ஈடுப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தலைமை ஆசிரியர் அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ததோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராமசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.
இதுகுறித்து உடனே குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக இதுமாதிரியான சம்பவங்கள் பெண்கள், மாணவிகளுக்கு அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்