வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப் பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் அதிகரித்து காணப்படும் நிலையில் தலைநகர் டெல்லியில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நூறுக்கும் மேற்பட்ட ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.
கடும்குளிரை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்கள், தினசரி வேலைகளில் வழக்கம்போல் ஈடுபடவும் அவதியுற்று வருகின்றனர்.
தொடர்ந்து உத்தரப்பிரதேசம் வாரணாசியில், நிலவிய கடும் குளிரால் மக்கள் நெருப்பை மூட்டி கதகதப்பை நாடினர்.
தொடர்ந்து சாலையில் வாகனங்கள் செல்வது கூடத் தெரியாததால், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனஓட்டிகள் சென்றது குறிப்பிடத்தக்கது.