எந்த ஒரு மொழியையும் திணிக்க கூடாது;தமிழர்களுக்கு தமிழை திணிக்கும் ஆதிக்க மனப்பான்மை இல்லை ஆனால் அவர்கள் மூன்றாவது ஒரு மொழியை படியுங்கள் என கூறுவதாக வேலூரில் நடந்த முத்தமிழ் விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தெரிவித்துள்ளார்.
வேலூரில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் திருவள்ளூவர் தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா கல்லூரியின் செயலாளர் மணிநாதன் தலைமையில் நடந்தது.
இதில் கல்லூரியின் முதல்வர் பானுமதி மற்றும் திரளான மாணவிகள் பங்கேற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழு தலைவருமான திருச்சி சிவா பங்கேற்று தமிழ் நூல்களை வெளியிட்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சான்றுகளை பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா பேசுகையில் கூறியதாவது. தமிழர்கள் உலகெங்கிலும் இருக்கின்றனர். தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுந்தைய மொழியாகும். நான் நாடாளுமன்றத்தில் பலர் ஹிந்தியில் பேசினாலும் நான் ஆங்கிலத்தில் தான் பேசுவேன். ஆனால் வடமாநில எம்பிக்கள் ஹிந்தியில் பேசுவார்கள். வேறு ஒரு மொழியை திணிக்க கூடாது ஆனால் நாங்கள் சொல்கிறோம்
இருமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது. ஆனால் அவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டுமென சொல்கிறார்கள். ஹிந்தி என்பது சில நூறு ஆண்டுகள் முந்தைய கலப்பின மொழி எனத் தெரிவித்தார். எனவே அம்மொழி மீது பிற மொழியை திணிக்கக்கூடாது
சேர சோழ பாண்டியர்கள் இருந்த போது பல மொழிகள் இல்லவே இல்லை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றியது தமிழ் கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. . ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் மூத்த மொழி தமிழ் அறிவியலை கண்டு உணர்ந்தவன் தமிழன் காப்பியம் படைத்தவன் அக்காலத்தில் தமிழன் தான் சங்க கால இலக்கியத்தில் 46 பெண் புலவர்கள் இருந்தார்கள் என்பது தான் தமிழின் சிறப்பு என பேசினார்.