மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளயடித்து சென்ற நபரை ஆதம்பாக்கம் போலிசார் கைது செய்துள்ளனர்.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்த 81 வயதான மூதாட்டி சிவகாமிசுந்தரி 22ஆம் தேதி கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 2.5லட்சம் பணம் பறிக்கப்பட்டது.
சிசிடிவி கேமராவில் குடை அணிந்து வந்த நபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகைகளை பறித்துவிட்டு சென்றது தெரியவந்தது.
இவ்வழக்கில் கே.கே நகரை சக்திவேல் என்பவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல், இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு மூதாட்டி சீதாலட்சுமியை கொலை செய்து 12 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இரண்டு வருடங்களாக துப்பு கிடைக்காமல் தேடி வந்த நிலையில் சக்திவேல் தற்போது பிடிப்பட்டுள்ளார்.
Discussion about this post