அரசு மருத்துவமனைகளில் இனி..! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த அறிக்கை..?
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான பணி நேரம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் தற்போது , தமிழக சுகாதாரத்துறை மூன்று ஷிப்ட் என்ற முறையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பின் அடிப்படையில்.
மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு (D Grade Employees) கீழ்க்காணுமாறு பணி நேரம் நிர்ணயித்து ஆணை வெளியிட்டுள்ளது.
1. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை (1st shift)
2. மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2nd shift)
3. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3rd shift)
அதாவது முதல் ஷிப்ட்டில் 50 சதவீத பணியாளர்களும், இரண்டாவது ஷிப்ட்டில் 25 சதவீத பணியாளர்களும், 3வது ஷிப்டிலும் 25 சதவீத பணியாளர்களும் வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைநிலை ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.