கோவில் மரத்தில் சுற்றி திரிந்த அரிய வகை தேவாங்கு…!! சிறுவர்கள் செய்த செயல்…!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காக்கைகளால் கொத்தபட்டு துடித்து விழுந்த அரிய வகை தேவாங்குபத்திரமாய் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவர்கள்…
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கடத்தூர் பகுதியிலுள்ள நேற்று கோவில் மரத்தில் அரிய வகை தேவாங்கு ஒன்று சுற்றி திரிந்துள்ளது.. இதனை அங்கிருந்த காக்கைகள் பார்த்து கொத்தியுள்ளது.. காகங்களிடம் இருந்த தப்பித்து நாயிடம் சிக்கிக்கொண்டுள்ளது..
இதில் பயந்து போன தேவாங்கு கூச்சளிட்டுள்ளது.., அப்போது அப்பகுதியில் விளையாட வந்த சிறுவர்கள் வசந்த் அரவிந்த் கோகுல்ஸ்ரீ மற்றும் திவாகர் ஆகிய நால்வரும் பயத்தால் நடுங்கிகொண்டிருந்த தேவாங்கை நாயிடம் இருந்து மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்..
அதன் பின்னர் இந்த விஷயத்தை தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர்., அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்., அதன் பின் ஊர் பெரியவர்களின் உதவியோடு வனத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாய் ஒப்படைத்துள்ளனர்..
பறவை மட்டும் நாயிடம் சிக்கிகொண்ட தேவாங்கை தன்னிச்சையாக செயல்பட்டு அதனை மீட்டு வனத்துறையிடம் பத்திரமாக ஒப்படைத்த சிறுவர்களை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.. இந்த சிறுவயதில் சிறப்பாக செயல்பட்ட சிறுவர்கள் வசந்த் அரவிந்த் கோகுல்ஸ்ரீ மற்றும் திவாகர் ஆகியோரை நம் மதிமுகம் இன்று தொடர்பு கொண்டு பாராட்டியது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..