என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நிலக்கரி சுரங்கம் I, II மற்றும் அனல் மின் நிலையம் I, II மற்றும் அனல் மின் நிலைய ஒன்று விரிவாக்கம் என செயல்பட்டு வருகின்றன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கையாக பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது
பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில் குமார் முன்பு கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது வேலைநிறுத்த போராட்டம் நடத்த கூடாது என தொழில் சங்கத்தினருக்கு நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது எனவும் என்.எல்.சி நிறுவனம் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..