மனிதநேயம் கொண்ட அண்ணன் “துரைவைகோ”..! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!
தற்போது கோடை விடுமுறை முடிந்து கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவவி ஒருவனின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மாணவனின் தந்தை பணம் அனுப்பததால், கவலையுடன் அந்த குடும்பம் இருந்தபொழுது.. அந்த மாணவியின் தந்தை திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஆகி இறந்தவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதே தெருவில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இறந்த ஒருவரின் சடலம் இன்னும் திருச்சி வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தந்தையின் இறந்த உடலையாவது பார்க்க இயலுமா என பெரும் துயரத்தில் இருந்த அந்த குடும்பத்தின் வேதனையை புரிந்து கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ அவர்கள், அதற்கான ஏற்ப்பாடுகள் செய்து சடலத்தை அந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த மாணவியின் கண்ணீரை பார்த்தவுடன் மனவேதனை பட்ட அவர் மாணவியின் பள்ளிக்கட்டணதிற்காக அந்த நொடியே தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து கொடுத்துள்ளார். இந்த சம்பவம் திருச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு சில அரசியல் வாதிகளை போல அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என வாக்குறுதிகளை அள்ளிவிட்டு செல்லாமல் தன்னால் என்ன முடியுமோ அதை உடனடியாக “துரை வைகோ” அவர்கள் செய்வது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மனிதநேயம் கொண்ட எங்கள் அண்ணன் “துரைவைகோ” என அப்பகுதி மக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..