மதுரையில் மருத்துவர்கள் சாதனை..!! இப்படியும் கூட ஒருவரை காப்பாற்ற முடியுமா..?
மதுரை மாவட்டம் கமுதியை சேர்ந்த, பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவனை, ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து, முகம் மற்றும் கழுத்தில் பல இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்களால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்பட்டதாலும் சுவாசிப்பதில் தடை ஏற்பட்டதாலும், அவருக்கு எந்த நேரத்திலும் ஹைபோவோலெமிக் (hypovolemic) ஷாக் ஏற்படும் நிலை காணப்பட்டது. மேலும் அவரது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகள் செயல்பட போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாத ஆபத்தான நிலை தள்ளபட்டார்.
இந்நிலையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின மருத்துவர்கள், தாக்குதலுக்கு ஆளான 17 வயது சிறுவனுக்கு எட்டு மணி நேரம் அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிரை காப்பாற்றி, அவரது தோற்றத்தையும் முகத் உறுப்புகளின் செயல்பாடுகளையும் முழுமையாக மீட்டெடுத்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுமார் ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு, சிறுவன் முழுமையாக குணமடைந்தார். முகத்தில் ஒரு தழும்பு கூட இல்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த மருத்துவ குழுவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை (ENT), வாஸ்குலர் அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை,எலும்பியல் மற்றும் மயக்க மருந்து ஆகிய துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.
ENT துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் நாகேஸ்வரன் கூறுகையில், நோயாளி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவுடன், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். முதலில் முகம் மற்றும் கழுத்தில் தையல் போடப்பட்டு இரத்தம் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.
பின்னர் அவருக்கு புது இரத்தம் பல முறை ஏற்றப்பட்டது. இது நோயாளியை சீராக வைத்திருக்க உதவியது. சுவாசத்தை சரிசெய்ய, ENT அறுவை சிகிச்சை நிபுணர் ட்ரக்கியோஸ்டமி (tracheostomy) எனப்படும் சிகிச்சையை அளித்தார்.
அவரது கழுத்தின் முன்புறத்தில் ஒரு துளையை உருவாக்கி, ஒரு குழாய் ட்ரக்கியோஸ்டமி குழாய் என்று அழைக்கப்படுகிறது அந்த துளைக்குள் செருகப்பட்டு, சுவாசிப்பதற்கு மாற்று சுவாசப்பாதையை உருவாக்கினார்.
முகத்தில் வடு உருவாவதை குறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சதை அடுக்குகளில் காயத்துக்கு மிகவும் துல்லியமாக சிகிச்சை அளித்தார். உடனடியாக காயத்தை மூடியதால் நோய்த்தொற்றின் விகிதம் குறைக்கப்பட்டது.
அவரது தோற்றத்தை மீட்டெடுக்க நவீன ஒப்பனை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. மேலும் அவரது முகத்தில் ஏற்பட்ட வீக்கமும் சரி செய்யப்பட்டது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் முகத் தோற்றத்தை மீட்டெடுக்க ட்ராமா டாட்டூ சிகிச்சை அளித்தார்’.
டாக்டர் ஜிப்ரீல் ஒய்சுல் பேட்டி :
பல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவைசிகிச்சைத் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ஜிப்ரீல் ஒய்சுல் கூறுகையில், ’மாக்சில்லரி நரம்பு மற்றும் தாடை எலும்புகளின் முறிவுகள், டைட்டானியம் தகடுகள் மற்றும் மைக்ரோ ஸ்குரூக்களை பயன்படுத்தி ஓப்பன் ரிடக்ஷன் (OR ) மற்றும் இன்டெர்னல் பிக்சேஷன் (IF) ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன நுட்பங்களை பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டன.
வாய், தாடைகள், முகம் மற்றும் கழுத்து தொடர்பான பல்வேறு வகையான சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஓரல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை குழு, தாடையின் சீரமைப்பு மற்றும் நிலைப்பாடு மற்றும் கீழ் தாடையின் பல்வேறு இயக்கங்கள் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்தது.
டாக்டர் பினிட்டா ஜெனா பேட்டி :
பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் பினிட்டா ஜெனா கூறுகையில்,’ உடைந்த முக எலும்புகளை சீரமைத்த பிறகு, காதுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய உமிழ்நீர் சுரப்பியான பரோடிட் சுரப்பியின் செயல்பாடுகள் மற்றும் முகபாவனையின் தசைகளை கட்டுப்படுத்தும் தன்மை ஆகியவை புத்துயிர் பெற்றது. திசு மேலாண்மை மற்றும் முக அமைப்புகளை முடிந்தவரை சீரமைத்தல் என இந்த அறுவை சிகிச்சையின் ஒட்டுமொத்த நோக்கமும் பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகிறது.’
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..