சென்னைக்கு வரும் அடுத்த ஆபத்து..! தண்ணீரில் மூழ்க போகும் பகுதிகள்..? IPCC வெளியிட்டுள்ள அதிர்ச்சி..!
தற்போது புவி வெப்பமயமாகி இருப்பதால் அதன் விளைவாக, 2100-ல் உலக அளவில் கடல் நீர்மட்டம் 1.3 மீட்டர் முதல் 1.6 மீட்டர் வரை அதிகரிக்கும் என்பதால் பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அமைப்பு IPCC (Intergovernmental Panel on Climate Change) தெரிவித்துள்ளது. கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கடலோர பகுதிகள் மற்றும் நகரங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக IPCC முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இயற்கை துறைமுகங்கள், கலாசார மையங்கள், மத நினைவுச் சின்னங்கள் என பண்டைய காலந்தொட்டே நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.. சென்னை உள்ளிட்ட கடலோர மாநகரங்கள், கடல் நீர்மட்டம் அதிகரிக்கப்பால் கடலோர பகுதிகளுக்கு வரும் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் குறித்து ஆய்வறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது கடந்த 1987ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை, சென்னையில் கடல் நீர்மட்டமானது மொத்தம் 0.679 செ.மீ அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால், வருகின்ற 2040ம் ஆண்டில், சென்னையில் கடல் நீர்மட்டம் 17.4 சென்டிமீட்டர் அளவிற்கு அதிகரித்து வருவதால் 86.6 சதுர கிலோமீட்டர் அளவிலான சென்னையின் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.. என ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது..
அதேபோல், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மொத்த நிலப்பரப்பில் 1- 5 சதவீதம் (6.96-7.43 சதுர கிலோமீட்டர்) அளவிற்கு 2040ல் விசாகபட்டினம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளது.. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில் தூத்துக்குடி, கொச்சி, மும்பை, மர்மகோவா உள்ளிட்ட 15 இந்திய கடலோர நகரங்களில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கொண்டு வருவதால் பேராபத்து காத்திருப்பதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.