உங்கள் ஊர் செய்திகள்.. உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம் :
வேலூர் மாவட்டம், ராம்சேட் நகரில் புதியதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகம் மற்றும் மத்திய அரசின் திட்டமான பாபு ஜெகன் ஜீவன்ராம்,யோஜனா திட்டம் மூலம் அரசு இளங்கலை மாணவியர் விடுதியை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்..
இதனை தொடர்ந்து மாணவியர் விடுதியை பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் துவங்கி வைத்தார் இவ்விழாவில் மேயர் சுஜாதா சட்டமன்ற உறுப்பினர் அமுலு,மண்டல குழுதலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கெமிக்கல் மருந்தை எடுக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் புள்ளகுட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் :
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் தம்பி உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஃபெரோஸ்கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார்.
முன்னதாக அலுவலகத்திற்கு வந்த எஸ். பி ஃபெரோஸ்கான் அப்துல்லா ஆயுதப்படை காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் எலுமிச்சை கனி மற்றும் பூங்கொத்து கொடுத்து அவரை இன்முகத்துடன் வரவேற்றனர்.
அவிநாசி கோட்டத்திலுள்ள கருவலூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்தில் மேட்டூர் தாலுக்கா விருதாசம்பட்டி கிராமம், கூத்தனூர் தினேஷ்குமார் கடைநிலை ஊழியராக கருவலூர் பகுதியில் பணியாற்ற பணி நியமனம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வந்து உள்ளார். இந்நிலையில் கடை நிலை ஊழியர் அருகில் உள்ள மின்கம்பத்தில் மின் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக உடன் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மின்துறை அதிகாரிகள் தங்கள் சுய லாபத்திற்காக இதுபோன்று ஊழியர்கள் செய்யும் பணிகளை தவிர்த்து ஆபத்தான பணி செய்ய நிர்பந்தித்து வருவதால் இதுபோன்று உயிரிழப்புகள் பல்வேறு பகுதிகளிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது என்று வேதனை தெரிவிகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிக் கிலுப்பை கிராமத்தில் 10ரூபாய் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி காவ்யாஸ்ரீ உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து குளிர்பானம் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், குளிர்பான தொழிற்சாலையில் உள்ள சுகாதாரம் குறித்தும் குளிர்பான உற்பத்தி தொடர்பாகவும் மூலப் பொருட்கள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
மேலும் சிறுமி உயிரிழப்பிற்கு குளிர்பானம் குடித்ததே காரணம் என்று உறுதியாக வில்லை எனவும், இங்குள்ள தொழிற்சாலையில் குளிர்பான மாதிரிகள் ஆய்வு முடிவில் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், குளிர்பான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் அனைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..