நீங்கள் பார்க்க மறந்த முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலன் வட்டம் என்ற பகுதியில் டிராக்டர் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் பிரசன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் டிராக்டர் ஓட்டுநர் பிரகாசம் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பலூர் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் :
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஸ்ரீ காளியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நவக்கிரஹ ஹோமம், கணபதி பூஜை மற்றும் யாகசால பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் கோபுரம் மங்கல காளி சிலைக்கு கலச நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் :
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு தோட்டக் கலை துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் தென்னை பயிரில் நோய், பூச்சி தடுப்பு மற்றும் விவசாயத்தில் புதிய தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை காப்பீடு மூலம் பெறும் வழி முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல், தென்னை மரம் ஏறுதல் உள்ளிட்ட இயந்திரங்களின் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் காயத்ரி ஆட்டோ கேரேஜ் சர்விஸ் சென்டரில், வேலை பார்த்து வந்த சுதாகர் கார் பழுது பார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிராமிய காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..