உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கார் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது குடோனில் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்களை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து அதேபகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் எசையனூரில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மருத்துவர் அருள்பாண்டியன் தலைமையில் 8000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வருகின்ற ஜனவரி 20ம் தேதி கோமாளி தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றனர். வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள், 100% வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி பேரணியை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் பிரிடென்சி சாரி டபுள் பவுண்டேசன் சார்பில் பிரசிடென்சி சமுதாய கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் முதல் செவிலியர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 35 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பட்டயங்களாக வழங்கப்பட்டது. இதில் ஐ.சி.ஆர்.டி.சி.இ இயக்குனர் சேவியர் அல்போன்ஸ் பட்டயங்களை வழங்கி மாணவர்களை பாராட்டினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..