நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! மீண்டும் ஒரு பார்வை…!!
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் ஊராட்சி பகுதியில் தமிழக மீன் வளதுறை சார்பில் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.இதில் 32 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்ச்சிக்காக விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மெர்சி அமலா, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன், மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
அரியலூர் மாவட்டம் :
திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாதேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் :
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாளையொட்டி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.
தர்மபுரி மாவட்டம் :
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சின்னாறு நீர் தேக்கத்தில் இருந்து இந்த ஆண்டு பாசனத்திற்கான நீரை மாவட்ட ஆட்சியர் சாந்தி திறந்து வைத்தார். இதன்மூலம் 13 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் :
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவற்றின் வீட்டில் 11 பேர் கொண்ட கும்பல் 64 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த முத்துராமன்என்பது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில் கைவினை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார். இக்கண்காட்சியில் மர சிற்பங்கள், கைவினை பொருட்கள் மட்டுமின்றி நவரத்தின மாலைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடலில் மாயமான கிரி என்பவரின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் கருங்காலி கோரை குப்பம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காட்டூர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..