உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணசுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கரூர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், மக்கள் கூட்டம் அதிகளவு இருந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக அனல் தகித்து பொதுமக்கள் மிக அவதிப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, அடுக்கபாறை, சத்துவாச்சாரி, பெருமுகை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்த்து. தொடர்ந்து காட்பாடியில் பெய்த 1 மணி நேர கனமழையால் சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் நிரம்பி, கழிவுநீர்ருடன் மழை கலந்து வெளியேறியதால்,
சாலையில் நடந்துச் செல்பவர்கள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் நடக்கவே அச்சப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள திரு சீனிவாச பெருமாள் கோயிலில் வருடம் ஒரு முறை புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளும் மிகவும் பிரசித்தி பெற்ற புனிதம் வாய்ந்த கிழமைகளாக பொதுமக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மூக்கனூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிமூல வெங்கட்ரமண ஸ்வாமி திருக்கோவிலில் புராட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு
நேற்று ஆதிமூல வெங்கட்ரமண சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, தேன் போன்ற உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.