உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரமைய பகுதியில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக சோதனையிட்டனர்.
நீண்ட சோதனைக்கு பின் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் பொய் என்று தெரிந்து காவல்துறையினரும், தடையவியல் நிபுணர்களும் , அங்கிருந்து வெளியேறினர்.
போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் அலட்சியம் :
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் திடிரென அரசு நகர பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துரையினர் பொதுமக்கள் உதவியுடன் அரசு பேருந்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தள்ளி சென்று பழுது நீக்க பணிமனையில் விடப்பட்டது.
இதனால் போக்குவரத்து பணிமனையில் உள்ள அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதால் இது போன்ற நிலை ஏற்படுவதாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியையொட்டிய வனப்பகுதியை ஒட்டியுள்ள அங்கனாம்பள்ளி கிராமத்தில் திடீரென ஒற்றை யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை நாசம் செய்துள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் யானையை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். மேலும் இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குழந்தைகள் விளையாட்டு போட்டி :
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் நடைப்பெற்ற மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.
இதில் அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் அரசு நிதி உதவி பெறும் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த 536 சிறுவர் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானலில் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் நெரிசலை கட்டுப்படுத்தவும் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடவும் கடந்த மே 7 ஆம் தேதி இ பாஸ் திட்டம் அமல்படுத்தி ஜூன் 30ம் நேற்று வரை செயல்படுத்தப்பட்டு வந்தது.
இன்நிலையில் இ-பாஸ் திட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து இந்த திட்டம் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..