24 மணி நேர ரோந்து பணி..!! 300க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது..!! காவல் ஆணையர் அருண் போட்ட உத்தரவு..!!
தமிழ்நாடு முழுவதும் ரவுடிசத்தை ஒழிக்கும் வகையில் காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. குறிப்பாக குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், ஆங்காங்கே ரோந்து பணியில் சுற்றி வருகின்றனர்..
கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 12 பேர் கொண்ட கும்பலால் பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேர் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பலரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., இந்த வழக்கில் மட்டும் 3 ரவுடிகள் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்…
அதனை தொடர்ந்து சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. குறிப்பாக ரவுடிகளை “ஏ, ஏ-பிளஸ், பி, சி” என 4 பிரிவாக லிஸ்ட் எடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கான முயற்சியல் தமிழகம் முழுவதும் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைத்து தீவிர வேட்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுவரை 7 பேர் என்கவுண்டரில் சுடப்பட்டுள்ளனர்.. மேலும் தலைமறைவாக இருந்த சில முக்கிய ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுவரை 300-க்கும்மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் காவலர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது அப்போது நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைக்கவும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும், காவல் வாகனங்களில் மின் விளக்குகளை எரியவிட்டவாறு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் போதைப் பொருட்கள் விற்பனை, பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சுற்ற செயல்கள் குறைந்துள்ளதாகவும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்ப்படுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..