உங்கள் ஊர் செய்திகள், உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மருது பாண்டியன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கோவை நோக்கிச் சென்ற காரை மடக்கி சோதனை செய்தார் மேலும் காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்ததால் அவரிடம் 7000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டும் அவர் வைத்திருந்த மதுபானம் மற்றும் 37 ஆயிரம் ரூபாய் ஆப்பிள் இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அனுப்பி உள்ளனர். இது குறித்த அந்த நபர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மருது பாண்டியன் மற்றும் காவலர் குரு ஆகியோரை மாநகர காவல் ஆணையர் லட்சுமி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது இதில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை நடத்தினர். மேலும் இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட 60 பேரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாட்டில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவச மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை வாலாஜா சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரி ஒன்றின் பின்பக்க சக்கர ராடு அச்சில் உடைந்து நிலை தடுமாறி நெடுஞ்சாலை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி பயங்கர விபத்து ஏற்பட்டது..இதன் காரணமாக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து போய் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் நின்றது இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளத்தில் இறங்கிய லாரியை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி நீண்ட வரிசையில் நின்ற போக்குவரத்தை சீர்படுத்தினர்
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே புகழ்பெற்ற சுந்தரி அம்மன் ஆலய ஆடிமாத விழாவில் அம்மனுக்கு 501 குட பால் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் தங்கள் கைகளாலேயே அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் மேலும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகளை கொண்டு பரதம்,யோகா,இசைகருவிகளை வாசிப்பு போன்ற வைகளை கொண்டு மக்கள் புதியதாக முயற்சியாக இவ்விழாவினை நடத்தினார்கள். இதனால் மாணவர்களிடம் புதைந்து கிடந்த பல திறமைகளை கிராம மக்கள் வெளிகொண்டு வந்ததுடன் நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கிராம பொதுமக்களும் பெற்றோர்களும் கண்டு ரசித்தனர் மாணவர்களின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திறமையை வெளிகாட்டி மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இதனால் மாணவர்களும் மகிழ்ச்சியடைந்து விழாவும் நடந்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், பகுதியை சேர்ந்த எழில்குமார் வேனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டதால் வேனை சக்திவேல் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி திருடு போனதாக 6 ஆம் தேதி சக்திவேல் தகவல் கொடுக்க அதன் பெயரில் அங்கு சென்று பார்த்த போது வேன் இல்லாததால் அதிர்ச்சியடைந்த எழில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவலர்கள் வழக்கு பதிவு செய்த நிலையில் சக்திவேல் மீது சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில் அன்பரசன் என்பவர் மூலமாக 80 ஆயிரம் ரூபாய்க்கு சிலம்பரசன் என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிலம்பரசன் சில நாட்களில் கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது . இதனை தொடர்ந்து நான்கு பேறையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர் நண்பராக பழகியவரே வேனை விற்பனை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..